Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சீனாவின் நட்புக்காக கெஞ்சி நிற்கமாட்டோம் என வடகொரியா தெரிவித்துள்ளது வடகொரியா
வடகொரியா தொடர்ந்து நடத்தி வரும் அணு ஆயுத சோதனைக்கு அமெரிக்கா, பிரான்ஸ்
உட்பட பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. வடகொரியாவின்
நட்பு நாடான சீனாவும் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அணு ஆயுத
சோதனைக்கு தொடர்ந்து சீனா எதிர்ப்பு தெரிவித்து வருவதால் சீனா-வடகொரியா
இடையேயான நட்புறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் சீனாவின் தேசிய பாதுகாப்புக்கு
அச்சுறுத்தலை உருவாக்குவதாக சீன பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இதற்கு
பதிலடியாக வடகொரியா தேசிய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்,
சீனாவின் நட்புக்காக கெஞ்சி நிற்கமாட்டோம் என வடகொரியா தெரிவித்துள்ளதாக
அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

0 Responses to சீனாவின் நட்புக்காக கெஞ்ச மாட்டோம்: வடகொரியா

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...