நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அமைச்சரவையில் சற்றுமுன்னர் (இன்று திங்கட்கிழமை) சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 9 அமைச்சரவை அமைச்சுக்கள் மற்றும் ஒரு இராஜாங்க அமைச்சு ஆகியவற்றில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அமைச்சரவை மாற்றங்களைச் சந்தித்தவர்கள் சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால முன்னிலையில் தங்களின் புதிய அமைச்சுக்களுக்காக பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இதுவரை காலமும் நிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க, அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு வெளிவிவகார அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீரவுக்கு, நிதி மற்றும் ஊடக அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை ஊடகம் மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சராக இருந்த கஜந்த கருணாதிலக்கவிடம் ஊடக அமைச்சுக்கு பதிலாக காணி அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. அவர் பாராளுமன்ற விவகார அமைச்சராகவும் தொடர்வார்.
அத்தோடு, எஸ்.பி.திசாநாயக்க சமூகமேம்பாடு, நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமை அமைச்சராகவும், டபிள்யூ.டி.ஏ.செனவிரட்ன தொழிலாளர், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மஹிற்த சமரசிங்கவுக்கு துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சும், அர்ஜூன ரணதுங்கவுக்கு பொற்றோலிய வளத்துறை அமைச்சும், சந்திம வீரக்கொடிக்கு திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சும், திலக் மரப்பணவுக்கு அபிவிருத்தி பணிகள் அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சுக்கள் அனைத்தும் அமைச்சரவை அந்தஸ்துள்ளவை.
இதேவேளை, மீன்பிடி அமைச்சராக இருக்கும் மஹிந்த அமரவீரவிடம், மஹாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

0 Responses to அமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்கள சமரவீர, வெளிவிவகார அமைச்சராக ரவி கருணாநாயக்க நியமனம்!