Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது உறவுகள் எங்காவது இருப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கும். ஆனால், காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கிருக்கின்றார்கள் என்று யாராலும் சொல்ல முடியாது.” என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வடக்கு மாகாண ஆளுநர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விடுதலைப் புலிகள், புளொட், ஈரோஸ், இந்திய அமைதிப் படை, இலங்கை இராணுவம் என்று பல தரப்புக்களும் பொறுப்புக் கூற வேண்டும்.

அதைவிடுத்து, ஒரு பகுதியினரை மட்டும் கேட்க முடியாது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழு அறிக்கையில், புலிகளாலும் பிள்ளைகள் பிடித்துச் செல்லப்பட்டதாக தாய்மார்கள் கூறியுள்ளதைக் காண முடியும். வேறு தரப்புக்களாலும் பிடித்துச் செல்லப்பட்டாக கூறப்பட்டுள்ளது. அதுபோலவே, இலங்கை இராணுவத்தினாலும் பிடித்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இராணுவத்தில் இருந்தவர்களும் காணாமற்போயுள்ளனர். அத்தோடு, இன்றைக்கு பிரபாகரன் இல்லை. கிட்டு இல்லை. சூசையும் இல்லை. யாரிடம் கேட்க முடியும். கேட்கவும் முடியாது. ஒன்றும் செய்யவும் முடியாது. இந்த அரசாங்கம் இளைஞர்களை பிடித்துச் சென்றுவிட்டு பொய்கூறவில்லை. யாரையும் பிடித்துச் செல்லவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத்தான் அரசாங்கம் இருக்கின்றது. அதனால்தான் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சான்றிதழ் வழங்கப்படுகின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது உறவுகள் எங்காவது இருப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கும். ஆனால், காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கிருக்கின்றார்கள் என்று யாராலும் சொல்ல முடியாது.” என்றுள்ளார்.

0 Responses to காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கிருக்கிறார்கள் என்று யாராலும் கூற முடியாது: ரெஜினோல்ட் குரே

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...