Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாடு பூராவும் மீண்டும் நாளை திங்கட்கிழமை முதல் கன மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் மீண்டும் கன மழை அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்கு, சப்ரகமுவ தெற்கு மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படக்கூடும் என்று இன்று காலை 5.30 க்கு வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி இடம்பெறக்கூடும்.

விசேடமாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளையில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். நாட்டின் ஊடாக அடிக்கடி 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். மழைபெய்யும் பொழுது இந்த காற்றின் வேகம் மேலும் அதிகரிக்ககூடும்.

இடி மின்னல் தொடர்பில் ஏற்படும் அனர்த்தங்களை தவிர்த்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டல திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, கடற்றொழில் மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை 07.00 மணிக்கு விடுத்த காலநிலை அறிக்கையில் தென்மேற்கு பருவகாலநிலை நாட்டின் ஊடாகவும் நாட்டை சுற்றியும் உள்ள கடற்பிரதேசத்தில் வலுவடைந்து இதுப்பதனால் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்க கூடும் என்று தெரிவித்துள்ளது.

இந்த காலநிலை எதிர்வு கூறல் இன்று முதல் மூன்று நாட்களுக்காக விடுக்கப்பட்டுள்ளது என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்ந்த கன மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவில் சிக்கி 120 பேர் உயிரிழந்துள்ளதுடன், 80 பேர் காணாமற்போயிருந்தனர். அத்தோடு, சுமார் ஐந்து இலட்சம் மக்கள் இடம்பெயர வேண்டிய ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 Responses to நாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்களை அவதானமாக இருக்க வேண்டுகோள்!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...