மஹிந்த ராஜபக்ஷவைச் சுற்றி பிழையான ஆலோசகர்கள் இருப்பதாக முன்னாள் இராஜதந்திரியும், கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) முக்கியஸ்தருமான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கை வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை மஹிந்த ராஜபக்ஷ சந்தித்தமை தேவையற்ற செயற்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிரணி காலி முகத்திடலில் நடத்திய மே தினக் கூட்டத்தினைப் பார்த்து இந்தியா, மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திப்பதைத் தவிர்த்தது. ஆனாலும், மஹிந்த ராஜபக்ஷவே மோடியைச் சந்திக்க நேரம் கேட்டுச் சென்றமை வேண்டாத வேலை என்றும் தயான் ஜயதிலக்க கூறியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது தவணைக்கான ஆட்சிக் காலத்தின் போது பிழையான ஆலோசனைகளை வழங்கி வந்தவர்களே, தற்போதும் அவரோடு இருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to மஹிந்தவைச் சுற்றி பிழையான ஆலோசகர்கள்: தயான் ஜயதிலக்க