Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலகில் பல பாகங்களிலும் இருக்கும் அடிப்படைவாத தமிழ்க் குழுக்கள் உயிரைக் கொடுத்து கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) தலைவர்களை பாதுகாத்து வருகின்றன என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அடிப்படைவாத தமிழ்க் குழுக்கள், பிரபாகரனுக்கு ஒரு விளக்கையும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு மற்றுமொரு விளக்கையும் ஏற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராஜதந்திர சிறப்புரிமைச் சட்டத்தின் கீழ் கட்டளைகளை அங்கீகரிப்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே மங்கள சமரவீர இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கூட்டு எதிரணியினரை புலம்பெயர்ந்து வாழும் அடிப்படைவாத தமிழ்க் குழுக்கள் காப்பாற்றி வருவதாக அறிக்கைகள் கிடைத்துள்ளன. உண்மையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மக்களின் ஆணையைப் பெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வரலாற்றில் முதன் தடவையாக வடக்கிலுள்ள தமிழ் மக்களின் அதிகூடிய வாக்குகளைப் பெற்றவராவார். ஆகவே, அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்கிற தேவை கூட்டு எதிர்க்கட்சியினருக்கும், உலகில் பல பகுதிகளில் எஞ்சியுள்ள அடிப்படைவாத தமிழ்க் குழுக்களுக்கும் உள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to புலம்பெயர் அடிப்படைவாத தமிழ்க் குழுக்கள் மஹிந்த அணியைக் காப்பாற்றி வருகின்றன: மங்கள சமரவீர

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.