பண மதிப்பிழப்பு அறிவிப்புதான் இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என்று மத்திய
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் சார்பிலான இந்திரா காந்தி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
தூத்துக்குடியில் சிதம்பரநகர் திடலில் நடைபெற்றது. இதில் முன்னாள்
காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் மத்திய
நிதியமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர்
அல்போன்ஸ் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து
கொண்டனர். மாநில துணைத்தலைவர் சண்முகம் இக்கூட்டத்துக்குத் தலைமை
தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ப.சிதம்பரம் பேசுகையில், இந்தியாவில்
ஜனநாயக முறைப்படியே தேர்தலில் வெற்றிபெற்று பாஜக ஆட்சியைப் பிடித்தது.
ஆட்சியின் தலைமைப் பொறுப்பை நரேந்திர மோடி ஏற்றுள்ளார். அதை நான்
மறுக்கவில்லை. ஆனால், மோடி சொன்னதை செய்யவில்லை என்பதுதான் உண்மை.
தேர்தல் சமயத்தில் அவர் அளித்த வாக்குறுதிகள் ஒன்றுகூட
நிறைவேற்றப்படவில்லை. இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் பாஜக வெற்றிபெற
முடியவே இல்லை. அதற்கு ஒரே காரணம், தமிழக மக்கள் முட்டாள்கள் இல்லை
என்பதே ஆகும்.
திடீரென ஏதோ ஒருநாள் மாலையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள்
செல்லாது என மோடி அறிவித்தார். மேலும், இந்த நடவடிக்கையால் ஊழல்,
கறுப்புப் பணம், கள்ள நோட்டு ஆகியவை ஒழியும் என்றும் அவர்
உறுதியளித்தார். ஆனால் இதனால் கறுப்புப் பணம் ஒழியவில்லை. அதற்கு மாறாக
ஏழை மக்கள் மட்டுமே பெரிதும் பாதிக்கப்பட்டனர். வருமான வரிச்சோதனைகளில்
பல கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில்
நிச்சயமாக ஊழல் ஒழியவில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் பண மதிப்பிழப்பு
அறிவிப்புதான் இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என கூறினார்.

0 Responses to பண மதிப்பிழப்பு அறிவிப்புதான் இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்:ப.சிதம்பரம்