இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் தொடர்பில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் (Xi Jinping) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுதாபச் செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் தனது ஆழ்ந்த அனுதாபத்தை சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளதுடன் அனர்த்தத்திற்கு உட்பட்ட மற்றும் அவர்களது உறவினர்கள் தொடர்பில் கவலையை தெரிவித்திருப்பதாகவும் அந்த செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பாரம்பரிய நண்பர் என்ற வகையில் சீனா அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு முழுமையாக உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீட்சிபெற்று சேதமடைந்த வீடுகள் புனரமைக்கப்படும் என்று தான் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் அந்த செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இலங்கையின் இயற்கை அனர்த்தத்திற்கு சீன ஜனாதிபதி அனுதாபம் தெரிவிப்பு!