வெள்ளிக்கிழமை லிபியாவின் தெற்கே உள்ள விமானத் தளம் ஒன்றைக் குறி வைத்து நடத்தப் பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 141 இற்கும் அதிகமான மக்கள் கொல்லப் பட்டுள்ளனர். இத்தாக்குதலை அடுத்து ஐ.நா இன் வழிகாட்டுதலுடன் இயங்கி வரும் லிபிய அரசின் தலைவர் அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சரை அதிரடியாகப் பதவி நீக்கம் செய்தும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முடுக்கியும் உத்தரவிட்டுள்ளார்.
யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்க பட்டு வந்த பகுதியில் பிராக் அல் ஷாட்டி என்ற இராணுவ விமானத் தளமே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இத்தாக்குதல் குறித்துத் தகவல் அளித்த LNA எனப்படும் லிபிய தேசிய இராணுவத்தின் பேச்சாளர் அஹ்மெட் அல் மிஸ்மாரி பேசுகையில் கொல்லப் பட்ட அனைவரிலும் 103 பேர் விமானத் தளத்தில் தங்கியிருந்த LNA துருப்புக்கள் ஆவர் என்று தெரிவித்துள்ளார். இந்த மோசமான தாக்குதலுக்கு இதுவரை எந்த போராளி அமைப்பும் பொறுப்பு ஏற்காத நிலையில் குறிப்பிட்ட பகுதியில் மீண்டும் உடனடி யுத்த நிறுத்தம் அமுல் படுத்தப் பட வேண்டும் என லிபிய அரசு வலியுறுத்தியுள்ளதுடன் தாக்குதலையும் வன்மையாகக் கண்டித்துள்ளது.
இதேவேளை தெற்கு ஈராக்கிலும் பக்தாத்திலும் அமைந்துள்ள இராணுவ சோதனை சாவடிகள் மீது ISIS தீவிரவாதிகள் மேற்கொண்ட தற்கொலைக் கார்க் குண்டுத் தாக்குதலில் குறைந்த பட்சம் 35 பேர் கொல்லப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ISIS உட்பட ஜிஹாதி அமைப்புக்களிடம் இருந்து ஈராக்கின் 2 ஆவது மிகப் பெரிய நகரான மோசுலை மீட்கும் பாரிய ஆப்பரேஷனில் ஈராக்கிய படைகள் கடந்த 7 மாதமாகத் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் இத்தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இத்தாக்குதல் நடத்தப் பட்ட போது பாதுகாப்புப் படையினர் ஒரு தாக்குதல் தாரியை சுட்டுக் கொல்ல இயன்ற போதும் 2 ஆவது நபர் தனது கார்க் குண்டை உடனே வெடிக்கச் செய்துள்ளார்.
ஜிஹாதி போராளிகளிடம் இருந்து ஈராக்கின் பாதுகாப்புப் படை அமெரிக்கத் துருப்புக்களின் வான் தாக்குதலின் உதவியுடன் டிக்ரிட், ரமாடி மற்றும் ஃபல்லுஜா போன்ற முக்கிய நகரங்களைப் கைப்பற்றியதன் பின் தற்போது மோசுலை மீளக் கைப்பற்ற கடும் முற்றுகைப் போரை மேற்கொண்டு வருகின்றது. மோசுலின் கிழக்குப் பகுதியை தற்போது கட்டுப்பாட்டின் கீழ் ஈராக் துருப்புக்கள் கொண்டு வந்துள்ள போதும் மேற்கு மோசுல் உட்பட பெரும் பகுதி இன்னமும் ISIS வசமுள்ளது. இப்பகுதியில் போர் காரணமாக இதுவரை 1/2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஆயினும் 250 000 பொது மக்கள் வரை இன்னமும் மோசுலின் கிழக்குப் பகுதியில் அதாவது யுத்தப் பகுதியில் அகப்பட்டுக் கொண்டுள்ளனர்.
இங்கிருந்து வெளியேறும் மக்களை ISIS சுட்டுக் கொல்வதாலும் யுத்த சமயத்தில் இம்மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி வருவதாலும் மேற்கு மோசுலில் மிகப் பெரும் மனித அவலம் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to லிபியாவிலும் ஈராக்கிலும் தீவிரவாதத் தாக்குதலில் பலர் பலி! : லிபிய பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம்