இராணுவம் உள்ளிட்ட முப்படையினரும் நடாத்தும் நிகழ்வுகளில் வடக்கு பாடசாலை மாணவர்கள் கட்டாயமாக உள்வாங்கப்படுவதை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரியுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
எம்.கே.சிவாஜிலிங்கம் அங்கு தெரிவித்துள்ளதாவது, "பனங்காட்டுக்குள் புத்தி கூர்மை" என தலைப்பிட்டு நிகழ்வொன்றை படையினர் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தியுள்ளனர். இதில், மாலை 06.00 மணிக்கு பின்னர் பாடசாலை மாணவர்கள் அழைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இராணுவம் நிகழ்வை நடத்துவதாக இருந்தால் படை முகாமுக்குள் நடத்த வேண்டும். அதற்கு பாடசாலை மாணவர்களை அழைக்க கூடாது.” என்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, “இவ்வாறான நிகழ்வு நடைபெற்றமை தொடர்பாக எமக்கு எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. ஆனால், இவ்வாறான நிகழ்வுகள் நடக்கின்றபோது முன்னதாகவே எமக்கு தெரியப்படுத்துவார்கள், எனினும் இந்த நிகழ்வு குறித்து தெரியப்படுத்தவில்லை. எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறாது பார்த்துக் கொள்வோம்.” என்றுள்ளார்.

0 Responses to இராணுவ நிகழ்வுகளில் பள்ளி மாணவர்கள் கட்டாயமாக உள்வாங்கப்படுவதை தடுக்க வேண்டும்: சிவாஜிலிங்கம்