Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டம் அவசியமற்றது. ஆகவே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதற்காக தமிழ், முஸ்லிம், அரசியல் கட்சிகளையும், முற்போக்கு சிங்கள சக்திகளையும் ஒன்றிணைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் உடன்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் மற்றும் ஈபிஆர்எல்எப் ஆகியவற்றுக்கு இடையே பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. இதன்போதே மேற்கண்ட விடயத்துக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக ரெலோ அமைப்பின் பொதுச் செயலாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளதாவது, “ரெலோ அமைப்பின் சார்பில் இந்த கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இந்த கலந்துரையாடலில் இலங்கையில் பயங்கரவாதம் இல்லாத நிலையில் அந்த தடைச் சட்டம் தேவையற்றது. எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க கோரும் நிலையில் நடைமுறையில் உள்ள தடைச் சட்டத்தை காட்டிலும் மோசமான சட்டம் ஒன்றை கொண்டு வருவதற்கு முயற்சிக்கப்படுகிறது.

இந்நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டமே தேவையில்லை. அந்த சட்டம் நீக்கப்பட வேண்டும் என தீர்மானித்துள்ளோம். மேலும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் நீக்குவதற்கு சகல அரசியல் கட்சிகளினதும் ஒத்துழைப்பை கோருவதற்கும் தீர்மானித்துள்ளோம்.

இதனடிப்படையில் 2ஆம் கட்டமாக மலையக அரசியல் கட்சிகளுடனும், முஸ்லிம் அரசியல் கட்சிகளுடனும் பேசுவதற்கு தீர்மானித்துள்ளோம். மூன்றாம் கட்டமாக தென்னிலங்கையில் உள்ள இடதுசாரி கட்சிகள் மற்றும் முற்போக்கு கட்சிகளுடன் பேசுவதற்கு தீர்மானித்துள்ளோம். இந்த கலந்துரையாடலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலை முன்னணி ஆகியவற்றுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். எனினும் அவர்கள் வரவில்லை.” என்றுள்ளார்.

0 Responses to பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்சிகளின் ஆதரவினைக் கோர கூட்டமைப்பு தீர்மானம்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.