கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பளைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, ஏ9 பிரதான வீதியில் கற்சிலைவெளிப் பகுதியில் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
119 அவசர பொலிஸ் இலக்க வாகனத்தினர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் அந்தப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்ததாகவும், அப்போது வீதியிலிருந்த பற்றைப் பகுதியிலிருந்து மூன்று துப்பாக்கி வெடிகள் கேட்டதாகவும் பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரி-56 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தியே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாப் பொலிஸார் கூறுகின்றனர். எவருக்கும் இதன்போது காயங்கள் ஏற்படவில்லை என்றும், வாகனத்துக்கும் சேதம் ஏற்படவில்லை என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

0 Responses to கிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு!