ஆயிரக்கணக்கானவர்களின் கண்ணீர் கடலாக வழிந்தோட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுச் சுடரினை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று வியாழக்கிழமை காலை ஏற்றினார்.
இறுதி மோதல்களில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள், தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் முன்னெடுக்கப்படுகின்றது. அஞ்சலி நிகழ்வுகளும், கூட்டுப் பிரார்த்தனைகளும் தொடர்ந்து வருகின்றன.
இந்த நிலையில், முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் திடலில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரமான இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்களும், மாகாண சபை உறுப்பினர்களும், சர்வமதத் தலைவர்களும், ஆயிரக்கணக்கான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
கொல்லப்பட்டவர்களுக்கான நீதி வேண்டி உறவினர்கள் பெருங்குரலெடுத்து அழுது அஞ்சலி செலுத்தினர். முள்ளிவாய்க்கால் திடல் மாத்திரமின்றி தமிழர் தாயகமே பெரும் உணர்ச்சியோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை நினைவுகூர்ந்து வருகின்றயது.

0 Responses to கண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்; பொதுச் சுடரினை சி.வி.விக்னேஸ்வரன் ஏற்றினார்!