Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று வெள்ளிக்கிழமை (மே 12) ஆரம்பிக்கின்றது.

ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை பேராயுதங்கள் கொண்டு 2009 காலப் பகுதியில் எதிரிகள் கொன்றழித்தவை உலகம் பார்த்துக் கொண்டு மௌனமாக இருந்தது. அந்தக் கொடூரங்கள் இடம்பெற்று எட்டு ஆண்டாகிறது.

இந்த நிலையில், ஆறாத் துயர் நிறைந்த நினைவேந்தல் வாரத்தை, ஒற்றுமையாகவும் வன்முறைகளைத் தவிர்த்தும் கடைப்பிடிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.

இன்று ஆரம்பமாகும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், மே 18ஆம் நாள் முள்ளிவாய்க்காலில் ஈகச்சுடரேற்றி நடத்தப்படும் நினைவேந்தலுடன் முடிவுக்கு வரும்.

‘முள்ளிவாய்கால் நினைவேந்தல் இன்று ஆரம்பமாகின்றது. ஒற்றுமையாக – அனைவரும் இணைந்து நினைவேந்தலை கடைப்பிடிக்க வேண்டும். மே 18ஆம் நாள் முள்ளிவாய்க்கால் மண்ணில் சுடரேற்றி அஞ்சலி செலுத்த வேண்டும். இதற்காக எல்லோரையும் அழைக்கின்றோம். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலத்தில் இறை நம்பிக்கை உடையவர்கள், தங்கள் உறவுகளின் ஆன்ம ஈடேற்றத்திற்காக – ஆத்மசாந்திக்காக ஆலயங்களில் வழிபாடுகளை நடத்தலாம். நினைவேந்தல் வாரத்தில் வன்முறைகளையும் – களியாட்டங்களையும் தவிர்த்து, ஒவ்வொரு தமிழனும் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை.சேனாதிராசா கேட்டுக்கொண்டுள்ளார்.

0 Responses to ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ வாரம் இன்று ஆரம்பம்!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...