Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரதமர் நரேந்திர மோடியை இந்த வாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க
உள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.
12 ஆண்டுகளுக்கு பின் தனது ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்
அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், "அரசியல் போர் வரும்போது
களம் இறங்குவோம், தமிழக அரசியல் அடித்தளமே சீர்கெட்டுப்போயுள்ளதாக தனது
அரசியல் பிரவேசம் பற்றி பரபரப்பான கருத்தை கடந்த வெள்ளியன்று
தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியை ஓ.பி.எஸ் டெல்லியில் சந்தித்த நிலையில்
ரஜினிகாந்த்துக்கும் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளது. இந்த சந்திபிற்கு பாஜக தரப்பில் இருந்து அணுகியதாகவும்
மேலும் இது குறித்து இறுதி முடிவு ஏதும் எடுக்கவில்லை என தகவல்கள்
தெரிவிக்கின்றன.

இதனிடையே, இரண்டு அணிகளாக உள்ள அதிமுக இணையும் பட்சத்தில், ரஜினியையும்
சேர்த்து கூட்டணி அமைத்து வரும் தேர்தலை சந்திக்கும் திட்டம் உள்ளது என
பாஜகவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து பல வியூகங்கள் உலா வரும்
நிலையில், வருகின்ற குடியரசுத் தலைவர் தேர்தலின் போது ரஜினிகாந்த் தனது
தீவிரமான அரசியல் நகர்வை முன்னெடுப்பார் எனவும் தகவல் பரபரக்கிறது

இந்நிலையில்,ரஜினிக்காக பாஜக கதவுகள் திறந்தே இருக்கின்றது: என்று பாஜக
தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். நல்ல மக்கள் யார் வேண்டுமானாலும்
பாரதிய ஜனதாவில் இணையலாம் எனவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

0 Responses to நரேந்திர மோடியை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்?

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.