தமிழ் மக்களை கொலை செய்து பாதகங்களைப் புரிந்தவர்களை தண்டிப்பதற்கு இராஜாங்கப் பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜயவர்த்தன முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதைவிடுத்து, எங்களை விமர்சிப்பதற்கு இராஜாங்கப் பாதுகாப்பு அமைச்சருக்கு அருகதை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு திருகோணமலை கடற்கரையில் அமைந்திருக்கும் காந்தி சிலைக்கு முன்பாக அஞ்சலிச் சுடரேற்றும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் இடம்பெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே எம்.கே.சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஏழு மாத குழந்தை உட்பட குமுதினி படுகொலை, திருகோணமலையில் காந்தி சிலைக்கு முன்பாக ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை, மூதூர் கிளிவெட்டி குமாரபுரம் படுகொலை உட்பட தமிழ் மக்களை ஆயிரக்கணக்கில் படுகொலை செய்தவர்களை நினைத்தே ருவான் விஜயவர்த்தன மனவருத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
‘முப்படையினரும் வென்றெடுத்த சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டு, வடக்கில் விளக்கேற்றி, படையினரை அலட்சியப்படுத்துவதற்கு இடமளிக்கமாட்டோம். தற்போது எவ்வாறான நாடகம் ஆடினாலும் பரவாயில்லை. எதிர்காலத்தில் அவ்வாறான நாடகத்தை நடிப்பதற்கு வந்தால், அதற்கான தாளத்தை நாம் காண்பிப்போம்” என்று ருவான் விஜயவர்த்தன எச்சரிக்கைத் தொனியில் கடந்த வாரம் கருத்து வெளியிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to கொலைப் பாதகங்களைப் புரிந்தவர்களை முதலில் தண்டியுங்கள்; ருவானுக்கு சிவாஜிலிங்கம் பதில்!