Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதிய எதிர்பார்ப்புடன் நாடு என்ற ரீதியில் முன்நோக்கிச் செல்வதற்காகவே அமைச்சரவை திருத்தத்தை மேற்கொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டின் சுபீட்சத்திற்காக அர்ப்பணிப்புடன் செற்படுமாறு புதிதாக அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்ட அமைச்சர்களை ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.

புதிய அமைச்சர்களுக்கு இன்று திங்கட்கிழமை காலை பதவிப்பிரமாணம் செய்து வைத்த பின்னர் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நட்புறவோடும், அர்ப்பணிப்புடனும் நாட்டின் சுபீட்சத்திற்காக கூட்டுப் பொறுப்பை அமைச்சர்கள் நிறைவேற்ற வேண்டும். சிறந்த மாற்றங்களை மேற்கொள்வதன் மூலமே சமூகத்தையும், நாட்டையும் மாற்றியமைக்க முடியும்.” என்றுள்ளார்.

0 Responses to புதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே அமைச்சரவை மாற்றம்: ஜனாதிபதி

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.