Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தனியார் கல்வி நிறுவனங்களின் தரத்தை தீர்மானிப்பதற்காக தர நிர்ணய அதிகார சபையொன்று நிறுவப்படவிருப்பதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித்.பி.பெரேரா தெரிவித்துள்ளார்.

தர நிர்ணய அதிகார சபை சுயமாக இயங்கும் என்றும் தனியார் நிறுவனங்களின் தரத்தை ஆராய்வதற்கும் முறைப்படி இயங்காத நிறுவனங்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கும் சபைக்கு அதிகாரம் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைபாடு குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று திங்கட்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே பிரதி அமைச்சர் அஜித்.பி.பெரேரா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் தரம் மற்றும் தனியார் மருத்துவ துறை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையையடுத்து அரசாங்கம் தனியார் உயர் கல்வி தொடர்பிலான தனது கொள்கையை மேலும் உறுதி செய்துள்ளது.

கொள்கை மட்டத்தில் எவ்வாறான தீர்மானத்தை முன்னெடுப்பது என்பது தொடர்பில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து பத்திரிகைகளிலும் இது தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. இதன் ஊடாக இவ்விடயத்தில் அனைவருக்கும் தெளிவு கிடைத்துள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to தனியார் கல்வி நிறுவனங்களின் தரத்தை தீர்மானிப்பதற்கு தர நிர்ணய அதிகார சபை!

Post a Comment

Followers