Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதி நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலப்புத் தொடர்பில் மின் உற்பத்தி நிலையங்களின் பொறுப்பதிகாரிகளைக் கைது செய்யுமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஜூட்சன் முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் பகுதியில் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமை சுற்றாடல் அதிகார சபையூடாக உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சுன்னாகம் பகுதியில் இயங்கும் இரண்டு மின் உற்பத்தி நிலையங்களில், நீர் மாசடைவிற்குக் காரணமான மின் உற்பத்தி நிலையம் குறித்து விசாரணை நடத்தி அதன் பொறுப்பாளர்களைக் கைது செய்ய வேண்டும் எனவும் நீதவான் கட்டளை பிறப்பித்துள்ளார். கைது செய்யப்படுபவர்களுக்கு எதிராகக் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளமை தொடர்பில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அறிக்கையின் பிரகாரம், மின் உற்பத்தி நிலையத்தைச் சூழ 2 கிலோமீற்றர் சுற்றுவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சுத்தமான குடிநீர் விநியோகிக்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், நிலத்திற்கடியில் கலந்துள்ள எண்ணெய் மற்றும் கிரீஸ் என்பன வடக்கு நோக்கி நகர்வதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய சுன்னாகத்திற்கு வடக்கு பகுதியில் உள்ள கிராமங்களில் கிணறுகளில் நீர் மாசடையுமாயின் உடனடியாக சுற்றாடல் அதிகார சபையூடாக அது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலப்பு; மின் உற்பத்தி நிலையப் பொறுப்பாளர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.