“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடி நாங்கள் மேற்கொண்டு வரும் தொடர் போராட்டத்தினை யாருமே கண்டு கொள்கிறார்கள் இல்லை. எங்களை எல்லோரும் கைவிட்டு விட்டார்கள்.” என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று சனிக்கிழமை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய வளாகத்தில் 83வது நாளாகவும், வவுனியாவில் 79வது நாளாகவும், மருதங்கேணியில் 60வது நாளாகவும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
“காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் தொடர்பில் உரிய நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் தவறிவிட்டது. அதேபோல, தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் போதிய அழுத்தங்களைக் கொடுப்பதிலிருந்து தவறிவிட்டனர்.” என்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

0 Responses to எங்களை எல்லோரும் கைவிட்டு விட்டார்கள்; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கதறல்!