Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் இன்று சனிக்கிழமை சீனப் பிரதமர் லீ கேகுயாங்க் இனை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே சில முக்கிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஓப்பந்தங்கள் கைச்சாத்திடப் பட்டன.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் காஷ்மீர் பிரச்சினையைப் பொறுத்தவரை சீனா  பாகிஸ்தானின் கொள்கைக்கு ஆதரவளித்து வருவதாகவும் இனிமேலும் இது தொடரும் எனத் தான் எதிர் பார்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இவ்விடயம் தொடர்பில் இந்தியாவும் பாகிஸ்தானும் நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் சீனா தலையிடுவது உகந்ததாக இருக்கும் என்றும் சிறந்த தீர்வை அடைய உதவி செய்யும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இன்றைய சூழ்நிலையில் பாகிஸ்தானின் பிடியில் இருக்கும் காஷ்மீர் பகுதியின் வழியாக  சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தை மேற்கொள்வதற்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இப்பேர்ப் பட்ட ஒரு நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் தலையீட்டை பாகிஸ்தான் நாடுவது இந்தியாவுக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தலாம் என அரசியல்  அவதானிகள் கருதுவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to காஷ்மீர் விவகாரத்தில் சீனா தலையிடுவதை ஆதரிக்கும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.