Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் சவுதி அரேபியாவுக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று சனிக்கிழமை சவுதி அரேபியாவை வந்தடைந்துள்ளார். மேலும் சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் இல் அதிபர் டிரம்ப், அமெரிக்காவின் முதல் பெண்மணியான டிரம்பின் துணைவியார் மெலானியா டிரம்ப் மற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஆகியோருக்கு அந்நாட்டின் உயரிய சிவிலியன் வரவேற்பு அளிக்கப் பட்டுக் கௌரவிக்கப் பட்டது.

இதற்கு முன் இந்த உயரிய சிவிலியன் வரவேற்பு ரஷ்ய அதிபர் புட்டின், பிரிட்டன் பிரதமர் தெரேசா மேய் மற்றும் அமெரிக்க முன்னால் அதிபர் பாரக் ஒபாமா ஆகியோருக்கே வழங்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய கிழக்கு நாடுகளுக்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் 9 நாட்கள் திட்டமிடப் பட்டுள்ள இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். சவுதிக்கான இந்த விஜயத்தின் போது மெலானியா  டிரம்ப் முன்னால் அமெரிக்காவின் முதல் பெண்மணியான மிச்சேல் ஒபாமாவைப் போன்றே தலையைச் சுற்றி முக்காடு அணியாது வந்தடைந்தமை சமூக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதிபர் டிரம்பின் இந்த சவுதி விஜயத்தின் போது சர்வதேச வர்த்தகம், சர்வதேச அரசியல் மாத்திரமன்றி உலகை அச்சுறுத்தி வரும் ISIS தீவிரவாதத்தை ஒடுக்குவது தொடர்பிலும் கலந்து ஆலோசிக்கப் படலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது. மேலும் அமெரிக்க அதிபர் தேர்தல் சமயத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான டிரம்பின் கருத்துக்கள் இஸ்லாமிய நாடுகளுக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில் டிரம்பின் இந்த முதலாவது வெளிநாட்டுப் பயணமான சவுதிக்கான விஜயமும் சவுதி மன்னர் சல்மானுடனான சந்திப்பும் முக்கியத்துவம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

சவுதிக்கான பயணத்தை முடித்த  பின் அதிபர் டிரம்ப் இஸ்ரேலுக்கும் பின் வத்திக்கானுக்குச் சென்று போப் பிரான்சிஸ் ஐயும் சந்திக்கவுள்ளார். பின்னர் புருஸ்ஸெல்ஸில் நேட்டோ மாநாட்டிலும் சிசிலியில் நடைபெறவுள்ள 7 நாடுகளின் சந்திப்பிலும் டிரம்ப் கலந்து கொள்கின்றார்.

0 Responses to சவுதியில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு உயரிய சிவிலியன் வரவேற்பு

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...