Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“நாம் நினைத்த நேரத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் சூழல் தற்போது தோன்றியுள்ளது. சரியான நேரத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவோம்.“ என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றுவதாக தான் ஏற்கனவே கூறியமை தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “தற்போது நாட்டில் நடக்கும் விடயங்களை பார்க்கும் போது ஆட்சியைக் கைப்பற்றும் அந்த தருணத்தை நோக்கி விடயங்கள் நகர்வதை அனைவராலும் உணர்ந்துகொள்ள முடியும். அதிகாரம் எவ்வாறு கைமாறும் என்பது தொடர்பில் என் அளவுக்கு அறிந்துவைத்துள்ள எவரும் இருக்க முடியாது.

எம்மிடமிருந்து ஆட்சி சொல்லிவிட்டு நழுவிச் செல்லவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் உத்தியோகபூர்வ முடிவு வரும் முன்னமே நான் வீட்டுக்குச் சென்று விட்டேன். தற்போது எங்கள் கைகளுக்கு பிடி வந்துள்ளது.

எந்த நேரத்தில் எவ்வாறான அணுகுமுறைகளை மேற்கொண்டு ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற விடயத்தை நாம் மிக நுணுக்கமாக கையாள்கின்றோம். சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை மேற்கொண்டு ஆட்சியை மாற்றுவோம்.” என்றுள்ளார்.

0 Responses to நினைத்த நேரத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் சூழல் கனிந்துள்ளது: மஹிந்த

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...