Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அடுத்த வியாழக்கிழமை அமெரிக்க அதிபர் டிரம்ப் புருஸ்ஸெல்ஸில் தனது முதலாவது நேட்டோ மாநாட்டில் கலந்து கொள்கின்றார்.

இந்த மாநாட்டின் போது ஈராக்கிலும் சிரியாவிலும் ISIS இற்கு எதிரான போரில் நேட்டோவின் பங்களிப்பை இன்னமும் அதிகரிப்பது தொடர்பில் டிரம்ப் மும்மொழிவார் என்றும் ஆனால் பிரான்ஸும் ஜேர்மனியும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளன என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிரியாவில் அந்நாட்டு அரசையும் ரஷ்யத் தலையீட்டையும் எதிர்த்து மேலதிகமாக நேட்டோ செயற்பட  எத்தனிப்பது மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும் என்றும் ஆப்கானில் நேர்ந்தது போன்றே பின் வாங்க நேரிடலாம் என்றும் நேட்டோவின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். இது தவிர நேட்டோவில் அங்கம் வகிக்கும் கிறீஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளும் அமெரிக்காவின் திட்டத்துக்கு மாற்றுக் கருத்துக் கொண்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இதேவேளை இன்று வியாழக்கிழமை சிரியாவின் ஹமா மாகாணத்தில் அரச கட்டுப்பாட்டில் உள்ள இரு கிராமங்களில் ISIS தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50 இற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப் பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் குறித்து சிரியாவில் பிரிட்டனைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட தகவலில் கொல்லப் பட்டவர்களில் 15 பொது மக்களும் 27 அரச சார்பு போராளிகளும் அடங்குவதாகவும் 10 சடலங்கள் இன்னமும் அடையாளம் காணப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் இத்தாக்குதலுக்குப்  பின்னர் ISIS போராளிகள் அகாரெப் மற்றும் அல் மாபுஜேஹ் என்ற அந்த இரு கிராமங்களையும் தம் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்து விட்டதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ISIS மீதான NATO இன் ஆக்கிரமிப்பை அதிகரிக்கும் அமெரிக்க திட்டத்துக்கு பிரான்ஸ், ஜேர்மனி எதிர்ப்பு

Post a Comment

Followers