Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிலிப்பைன்ஸ் விமானப் படை மராவி நகரின் மையத்தில் தீவிரவாதிகளின் இலக்குகள் மீது குறி வைத்து மேற்கொண்ட விமானத் தாக்குதல் தவறாகி அந்நாட்டுத் துருப்புக்கள் மீதே வீழ்ந்ததில் 11 படை வீரர்கள் பலியாகி உள்ளனர்.

இதனால் பிலிப்பைன்ஸ் அரசு அதிர்ச்சியில் உறைந்துள்ளது. கிட்டத்தட்ட 9 நாட்களாக இப்பகுதியில் தீவிரவாதிகள் மீது போர் தொடுத்து வரும் பிலிப்பைன்ஸ் துருப்புக்கள் மீது நேற்று புதன்கிழமை அந்நாட்டு வான் படை வீசிய குண்டுகள் தவறுதலாக வீழ்ந்ததிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பிலிப்பைன்ஸ் அரசின் பாதுகாப்புச் செயலாளர் டெல்ஃபின் லொரென்ஷானா சர்வ சாதாரணமாக செய்தியாளர் மாநாட்டில் சிலவேளைகளில் சிரமமான சந்தர்ப்பங்களில் இது போன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் இடம்பெற்று விடும் என்றும் தவறு விமான ஓட்டி மீதோ அல்லது தரையில் இருந்து வழிகாட்டியவர் மீதோ தான் உள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

எனினும் கடந்த 9 நாட்களில் மராவியில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் பாதுகாப்புப் படையினர் 38 பேரும் பொது மக்கள் 19 பேரும் தீவிரவாதிகள் 120 பேரும் கொல்லப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கொல்லப் பட்டவர்களில் சவுதி, மலையா, யேமென், செச்செனியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 8 தீவிரவாதிகளும் அடங்குவதாகத் தெரிய வருகின்றது.

0 Responses to பிலிப்பைன்ஸ் தவறுதலாக மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 11 துருப்புக்கள் பலி

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...