Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் தொடர்ந்து வரும் இனப்பிரச்சினைக்கு, 13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்வுக்கான வழியை தேட வேண்டும் என்று இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நாட்டின் இன்றைய பெரும்பாலான பிரச்சினைகளுக்கு, கடந்த 1958ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தனிச்சிங்கள சட்டமே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் தம்மை இரண்டாம் தர பிரஜைகளாக கருதும் நிலையையும் இந்த தனிச் சிங்கள சட்டமே உருவாக்கியது. நாட்டில் மீண்டும் ஒற்றுமையை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றித்து பயணிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே பேராயர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

0 Responses to 13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்வுக்கான வழியை தேட வேண்டும்: கர்தினால் மல்கம் ரஞ்சித்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.