Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தற்போதையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் எதிர்வரும் யூலை மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ளது.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் வருகிற யூலை மாதம் 24ஆம் திகதி முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக, புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையகம் செய்து வருகின்றது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றிய அறிவிப்பை தேர்தல் ஆணையகம் நேற்று புதன்கிழமை வெளியிட்டது. அதன்படி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு யூலை 17ஆம் திகதி நடைபெறுகிறது.

இதற்கான அறிவிக்கை வருகிற 14ஆம் திகதி வெளியிடப்படுகிறது. அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்கும். குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 28ஆம் திகதி வரை தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 29ஆம் திகதி நடைபெறும்.

போட்டியில் இருந்து விலக விரும்புவோர், தங்கள் வேட்புமனுக்களை திரும்பப்பெற யூலை 01ஆம் திகதி கடைசி நாள். யூலை 17ஆம் திகதி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெறும். யூலை 20ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

0 Responses to குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் யூலை மாதம் 17ஆம் திகதி; தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Post a Comment

Followers