Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவில் சுமார் 200 யானைகளின்  எடைக்கு சமனான எடை கொண்டதாகக் கூறப்படும் மிக அதிக எடை கொண்ட ஜி சாட் - 19 என்ற தகவல் தொடர்பு செயற்கைக் கோள் இன்று திங்கட்கிழமை மாலை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 என்ற ராக்கெட்டில் விண்ணில் சீறிப் பாய்ந்துள்ளது.

ஜி சாட் - 19 இன் எடை  3136 கிலோ என்று கணிக்கப் பட்டுள்ளது. மேலும் இந்த செயற்கைக் கோள் ஏவப்படவுள்ள ராக்கெட் 3 வகையாகவும் 2 திடநிலை மற்றும் 1 திரவநிலை மோட்டார்களையும் கொண்டுள்ளது. இந்த நவீன ஜி சாட் - 19 செயற்கைக் கோள் கிட்டத்தட்ட 7 தகவற் தொடர்பு செய்மதிகளுக்கு சமனாகும். நிகழ்காலத்தில் புவி வட்டப் பாதையில் சுற்றி வரும் 41 இந்திய செயற்கைக் கோள்களில் 13 செய்மதிகள் தகவற் தொடர்பு செய்மதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கேம் சேஞ்சர் எனப்படும் ஜி சார் -19 செயற்கைக் கோள் விண்வெளி சார்ந்த இணையத் தள சேவைகளைப் பெறப் பயன்படவுள்ளது. இது லித்தியம் அயன் பேட்டரிகளில் மின்னைச் சேகரித்து இயங்கக் கூடியது ஆகும்.

விண்வெளிக் கதிர்வீச்சுகள் குறித்தும்  ஜி சாட் - 19 ஆய்வு செய்ய வல்லது. எதிர்கால விண்வெளி செயற்திட்டங்களுக்கு உதவக் கூடிய மைக்ரோ எலெக்ட்ரோ  மெக்கானிக்கல் சிஸ்டம்ஸ் மற்றும் ஆக்ஸ்லரோமீட்டர் போன்ற நவீன தொழிநுட்பங்கள் இதில் உள்ளன. இந்திய நேரப்படி இன்று மாலை 5:28  மணிக்கு இது விண்ணில் செலுத்தப் பட்டுள்ளது. இதன் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்த செயற்கைக் கோள் முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப் பட்டு இந்தியாவில் இருந்தே ஏவப்படுகின்றமை ஆகும்.

0 Responses to இந்தியாவின் மிக அதிக எடை கொண்ட ஜி சாட் 19 செயற்கைக் கோள் விண்ணில் ஏவுகை

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.