Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு 20 தமிழக மீனவர்களையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுகின்றனர். இதனால், தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கடந்த 21ஆம் திகதியும் நான்கு மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. இதுவரை 20 மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, 137 படகுகளும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. மீனவர்களையும், படகுகளையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும் விடுவிக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.