Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் ஆலோசகர் நிமலன் கார்த்திகேயன் மீது 50,000 டொலர் நிதியை மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பில் கனடாவில் வசிக்கும் இலங்கையர்கள் சிலர், கொழும்பிலுள்ள நிதி குற்றவியல் புலனாய்வு விசாரணைப் பிரிவில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளனர்.

இந்த வருடம் ஜனவரி மாதம் 08ஆம் திகதி “முதல்வருடன் ஒரு மாலை“ எனும் விருந்துபசார நிகழ்வு கனடாவில் நடைபெற்றது. அந்த நிகழ்வு மூலம் கிடைத்த நிதியை (50,000 டொலர்), முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் சார்பில் அவரது ஆலோசகர் நிமலன் கார்த்திகேயன் பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

ஆனாலும், தாம் பெற்றுக் கொண்ட நிதி தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனோ அல்லது அவரது ஆலோசகர் நிமலன் கார்த்திகேயனோ இதுவரை தமக்கு தகுந்த பதில்கள் ( நிதி எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள்) எதனையும் தரவில்லை என்று, குறித்த நிகழ்வை ஒழுங்கு செய்தவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

0 Responses to முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் ஆலோசகர் மீது 50,000 டொலர் நிதி மோசடிக் குற்றச்சாட்டு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.