யாழ்ப்பாணம் மயிலிட்டியில் இராணுவம் உள்ளிட்ட முப்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளில், 50 ஏக்கர் பகுதி எதிர்வரும் 03ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளது. இதனை, இராணுவப் பேச்சாளர் றொஷான் செனவிரத்ன அறிவித்துள்ளார்.
இந்தக் காணிகள் யாழ். அரச அதிபரிடம் இராணுவத்தினரால் அன்றையதினம் கையளிக்கப்படவுள்ளது. இதன்மூலம் 51 குடும்பங்கள் அப்பிரதேசத்தில் மீளக்குடியமரக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தக் காணிகள் யாழ். அரச அதிபரிடம் இராணுவத்தினரால் அன்றையதினம் கையளிக்கப்படவுள்ளது. இதன்மூலம் 51 குடும்பங்கள் அப்பிரதேசத்தில் மீளக்குடியமரக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 Responses to மயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவிப்பு!