ஆப்கானிஸ்தானின் பக்ராம் மாவட்டத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 8 துருப்புக்கள் பலியானதாகத் தெரிய வருகின்றது.
திங்கட்கிழமை இரவு பக்ராம் மாவட்டத்திலுள்ள இராணுவ முகாமில் பணியாற்றுவதற்காகச் சென்ற இராணுவ வீரர்களை இடைமறித்தே தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே 8 வீரர்கள் பலியானதுடன் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஆப்கானில் ஜனநாயக அரசுக்கும் அமெரிக்க இராணுவத்துக்கும் எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வரும் தலிபான்களே இத்தாக்குதலையும் நிகழ்த்தியிருக்கலாம் என ஊகிக்கப் படும் நிலையில் ஆப்கான் ஊடகங்கள் இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என செய்தி வெளியிட்டுள்ளன.

0 Responses to ஆப்கானிஸ்தான் அமெரிக்க இராணுவத் தளத்தில் தீவிரவாதத் தாக்குதல் : 8 துருப்புக்கள் பலி