Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐ.நா பொதுச் சபையின் புதிய தலைவராக ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர் மிரோஸ்லாவ் லாஜ்காக் தேர்வு செய்யப் பட்டுள்ளார். தற்போது ஐ.நா பொதுச் சபையின் தலைவராகக் கடமையாற்றி வரும் பிஜி தீவுகளைச் சேர்ந்த பீட்டர் தாம்சனின் பதவிக் காலம் செப்டம்பருடன் நிறைவடைகின்றது.

புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள லாஜ்காக் இனது முக்கிய கடமைகளாக ஐ.நா சபையின் வரவு செலவுகளைக் கண்காணிப்பது, பாதுகாப்புச் சபைக்கு உறுப்பினர்களை சேர்ப்பது மற்றும் பொதுச் சபையின் தீர்மானங்களைப் பரிந்துரைப்பது என்பன அமையவுள்ளன. புதன்கிழமை கூடிய ஐ.நா பொதுச் சபையில் அதன் தலைவர் உட்பட 16 துணைத் தலைவர்களும் கூடத் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இந்த அறிவிப்பை ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ கட்டரெஸ் வெளியிட்டார்.

தேர்வு செய்யப் பட்ட அனைத்துப் புதிய உறுப்பினர்களும் செப்டம்பரில் பதவியேற்பர் எனத் தெரிய வருகின்றது. ஐ.நா இன் 72 ஆவது பொதுச் சபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள லாஜ்காக் கடந்த வருடம் ஐ.நா பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஐ.நா பொதுச் சபையின் புதிய தலைவராக மிரோஸ்லாவ் லாஜ்காக் தேர்வு

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.