குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ள பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இன்று வெள்ளிக்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்தார். டெல்லியில் நாடாளுமன்ற மக்களவை செயலாளரிடம் ராம்நாத் கோவிந்த் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
ராம்நாத் வேட்பு மனு தாக்கல் செய்த போது பிரதமர் மோடி, பாரதி ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா மற்ற கூட்டணி கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் பங்கேற்க டெல்லி சென்ற முதல்வர் பழனிசாமி அவரை முன்மொழிந்து கையெழுத்திட்டுள்ளார். அதேபோல், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ராம்நாத்கோவிந்த் வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளார்.

0 Responses to குடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்பு மனுத் தாக்கல்!