வடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னமும் நியமிக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் ஆனோல்ட், வடக்கு மாகாண கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்த நிலையிலேயே, முதலமைச்சர் அதனை மறுத்துள்ளார்.
முதலமைச்சர் கூறியுள்ளதாவது, “கல்வி அமைச்சராக யாரும் நியமிக்கப்படவில்லை. அமைச்சர்கள் வெற்றிடத்துக்கு யார் யாரை நியமிப்பது என்பது சம்பந்தமாக என்னால் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. நானே நியமனங்களை செய்ய வேண்டியவர்.
போரின் பின்னரான காலகட்டத்தின் தேவைகளுக்கும் முன்னுரிமைகளுக்கும் அமைவாக (Needs and Priorities) உரிய செயல்முறைகளுக்கும் , செயல் நடவடிக்கைகளுக்கும் அமைவாக (due Processes and Procedures) உரிய நேரத்தில் குறிப்பிட்ட நியமனங்கள் என்னால் செய்யப்படும். தற்பொழுது பதவி விலகிய அமைச்சர்களின் அமைச்சுக்களை நானே மேற்பார்வை செய்து வருகின்றேன்.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியமிக்கவில்லை: விக்னேஸ்வரன்