Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவில் முதலீடு செய்வதற்கு உலகின் முன்னணி நிறுவனங்கள் பல ஆர்வமாக இருப்பதாக ‘கூகுள்’ நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உலகின் முன்னணி நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் (CEO) கலந்து கொண்ட சந்திப்பொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டார்.

அந்தக் கூட்டத்தில் கூகுள் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுந்தர் பிச்சையும் கலந்து கொண்டார். அங்கு அவர் கருத்து வெளியிடும் போதே, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சந்திப்பின் முடிவில் சுந்தர் பிச்சை கூறியுள்ளதாவது, “இந்தியாவிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக இந்த கூட்டம் அமைந்தது. இதில் பல முக்கிய கருத்துக்கள் பகிரப்பட்டன. எல்லோரும் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர். நாங்கள் அதில் எப்படி பங்கு கொள்ள போகிறோம் என்பதை ஆலோசித்து வருகிறோம்.

இந்தியாவில் ஜூலை 1ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி., அமலுக்கு வருகிறது. அதை நாங்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகிறோம். பல முக்கிய மாற்றங்களுக்கு இந்தக் கூட்டம் ஒரு துவக்கமாக இருக்கும் என நம்புகிறேன். இந்தியாவில் வரி விதிப்பில் இருந்த பல குளறுபடிகளை மாற்றும் மிகப்பெரிய ஆயுதமாக ஜி.எஸ்.டி., இருக்கும் எனவும், இது இந்தியாவிற்கு மிகப்பெரிய வளர்ச்சியை கொண்டு வரும் என நம்புகிறேன்.” என்றுள்ளார்.

0 Responses to இந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள் ஆர்வம்: ‘கூகுள்’ சுந்தர் பிச்சை தெரிவிப்பு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.