தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கத்தில் தடைகளை ஏற்படுத்தலாம் என்று சிங்கள பேரினவாதச் சக்திகளும், அரசாங்கத்திற்குள் இருக்கும் பலரும் எதிர்பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவடையுமாயின், அது தமிழ் மக்களுக்கு பாரிய பின்னடைவாக இருக்கும். குறிப்பாக, தமிழ்த் தரப்பு மீது பழியைப் போட்டுவிட்டு தப்பிக்கும் வழிகளை அரசாங்கமும் தேடிக்கொண்டிருக்கின்றது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய அரசியல் நிலவரங்கள் தொடர்பாக இன்று புதன்கிழமை தர்மலிங்கம் சித்தார்த்தன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
“தமிழ் தலைமைகளின் தவறினாலேயே தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்க முடியாமல் போனதென சர்வதேசத்திற்கு காட்டுவதற்கு அரசாங்கம் சந்தர்ப்பம் பார்த்திருக்கின்றது. அவ்வாறான நிலையில், கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படுமாயின், அரசாங்கத்துக்கு அது பாரிய வெற்றியாக அமைந்துவிடும். சர்வதேசத்தின் ஆதரவினை தக்கவைத்துக்கொள்ள வேறுபாடுகளை களைந்து ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to கூட்டமைப்பு பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தடைப்படும்; அதையே பேரினவாத சக்திகள் எதிர்பார்க்கின்றன: தர்மலிங்கம் சித்தார்த்தன்