அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசேகர சற்றுமுன்னர் (இன்று வெள்ளிக்கிழமை) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, மருதானையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர், அச்சந்திப்பு நிறைவடைந்ததும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் புதன்கிழமை சைட்டம் (SAITM) தனியார் வைத்திய பல்கலைக்கழகத்திற்கு எதிராக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டக்காரர்கள், சுகாதார அமைச்சினுள் அத்துமீறி நுழைந்து, அதன் கட்டடம் மற்றும் பொருட்களுக்கு சேதம் விளைவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

0 Responses to அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது!