வடக்கு மாகாண கல்வி மற்றும் விவசாய அமைச்சராகவும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையில், கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோர் குற்றவாளிகளாக காணப்பட்டனர்.
அதனையடுத்து, அவர்கள் இருவரையும் பதவி விலகுமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவர்கள் இருவரும் பதவி விலகினர்.
இந்த நிலையிலேயே, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் குறித்த இரண்டு அமைச்சுப் பதவிகளையும் முதலமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

0 Responses to கல்வி மற்றும் விவசாய அமைச்சராகவும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்பு!