Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு மாவட்ட மட்டத்தில் நல்லிணக்கக் குழுக்களை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டின் தற்போதைய கருத்திற்கொண்டு மாவட்ட செயலாளரை தலைமையில், மதத்தலைவர்கள், பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் தெரிவு செய்யப்பட்ட வேறு பிரதிநிதிகளுடன் கூடிய மாவட்ட மட்டத்திலான நல்லிணக்கக் குழுக்களை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது.

மதங்களிடையேயும், இனங்களிடையேயும் மேற்கொள்ளப்படும் மோதல்களை தீர்த்து வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு குறித்த குழுவுக்கு அதிகாரத்தை வழங்குவதற்கும், மாவட்ட குழுக்களுக்கு மேலதிகமாக தேசிய நல்லிணக்கக் குழுவொன்றை நியமிப்பதற்கும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க குழுவொன்றை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to மாவட்ட மட்டத்தில் நல்லிணக்கக் குழுக்களை அமைக்க அரசாங்கம் முடிவு!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...