Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கத்தாருடனான தடை உத்தரவை நீக்கி வளைகுடா குழப்பத்தைப் போக்க அல் ஜசீரா தொலைக்காட்சி வலையமைப்பை இழுத்து மூடுதல், ஈரானுடன் இராஜதந்திர உறவைத் துண்டித்தல் உட்பட முக்கிய 13 நிபந்தனைகளை கத்தாருக்கு விதித்திருந்தன சவுதி தலைமையிலான அரபு தேசங்கள்.

ஆனால் தற்போது 3 கிழமைகளாக நீடிக்கும் இந்தப் பிரச்சினையைப் போக்க இந்த நிபந்தனைகளுக்கு உடன்படும் நிலையில் மிகச்சிறிய வளைகுடா நாடான கத்தார் இல்லை என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த 13 நிபந்தனைகளின் அடிப்படையில் சமரசப் பணியை குவைத் மேற்கொண்டிருந்தது. இந்த நிபந்தனைகள் தொடர்பான சுருக்கமான விபரம் வருமாறு,

ஈரானுடன் இராணுவ மற்றும் இராஜ தந்திர உறவைத் துண்டிக்க வேண்டும். சர்வதேச விதிகளுக்கு அமைவாகவே ஈரானுடன் வணிக உறவை வைத்துக் கொள்ள வேண்டும்.

ISIS,அல்கொய்தா மற்றும் லெபனானில் உள்ள ஹிஸ்பொல்லா போன்ற அமைப்புக்களைத் தீவிரவாத அமைப்புக்களாக அறிவிக்க வேண்டும்.

அல்ஜசீரா தொலைக்காட்சியை மூட வேண்டும்.

கத்தாரில் உள்ள துருக்கி இராணுவத்தை திருப்பி அனுப்பி அவர்களுடனான இராணுவ ஒப்பந்தங்களையும் ரத்து செய்ய வேண்டும்.

அரபு தேசங்களால் தீவிரவாத அமைப்பு என அறிவிக்கப் பட்ட குழுக்களுக்கு நிதியுதவி செய்யக் கூடாது.

சமீப காலமாக கத்தாரால் ஏற்பட்ட பொருளாதார  மற்றும்  உயிர் இழப்புக்களுக்கு உரிய நிதியைக்  கொடுக்க வேண்டும்.

சவுதி அரேபியாவா 2014 ஆம் ஆண்டு  கொண்டு வரப் பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வளைகுடா மற்றும்  அரபு நாடுகளுடனான அரசியல், சமூக மற்றும் பொருளாதார நிபந்தனைகளை ஏற்க வேண்டும்.

10 நாட்களுக்குள் இந்த நிபந்தனைகளை ஏற்று பதில் அளிக்க வேண்டும் என்பவையே அவை.

இந்த அனைத்து  நிபந்தனைகளும் முதன் முறையாக AP ஊடகத்தில் வெளியிடப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to வளைகுடா குழப்பத்தைப் போக்க அரபு நாடுகள் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க மறுக்கும் நிலையில் கத்தார்!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...