இன்றைய நிலையில் உலகம் முழுவதும் அகதிகளாக இடம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை 65.6 மில்லியன்களாக அதிகரித்திருப்பதாக ஐ.நா சபை சமீபத்தில் வெளியிட்ட புள்ளிவிபரம் ஒன்றில் தெரிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டை விட 2016 ஆம் ஆண்டு இறுதியில் அகதிகளின் இடப்பெயர்வு 3 இலட்சத்தால் அதிகரித்துள்ளதாகவும் இது உலகத்தில் சமாதானத்தை நிலைநாட்டுவதில் ஏற்பட்ட தோல்வியைப் பிரதிபலிக்கின்றது என ஐ.நா அகதிகள் பிரிவின் ஆணையாளர் ஃபிலிப்போ கிராண்டி கருத்துத் தெரிவித்துள்ளார். உலகில் அகதிகளாக இடம்பெயர்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது என்பது மிகப்பெரிய மனித அவலத்துக்கு இட்டுச் செல்லக் கூடியது என்பதால் செல்வந்த நாடுகள் இது குறித்து ஆலோசிப்பது மிக அவசியமாகும். வெறுமனே அகதிகளை ஏற்றுக் கொள்வதோடு நின்று விடாது உலகில் அமைதியை ஏற்படுத்தவும் மறுகட்டமைப்பு முயற்சிகளை மேற்கொள்ளவும் அவை சிந்திக்க வேண்டும் என்கின்றார் ஃபிலிப்போ கிராண்டி.
உலகளாவிய ரீதியில் அகதிகளாக இடம்பெயர்பவர்களில் 84% வீதமானோர் ஏழ்மையான நடுத்தரமான நாடுகளில் அடைக்கலம் புகுந்து வருவது கூர்ந்து நோக்கத் தக்கது. இனி புள்ளி விபரத்தைப் பார்ப்போம்.
இன்றைய நிலவரத்தில் உலகில் அகதிகளாக இடம்பெயர்ந்தவர்கள் 65.6 மில்லியன் பேர்.
இதில் அகதிகள் எண்ணிக்கை : 22.5 மில்லியன்
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் : 40.3 மில்லியன்
தஞ்சம் கோருபவர்கள் : 2.8 மில்லியன்
அதிகளவு அகதிகள் இடம்பெயரும் நாடுகள் :
சிரியா : 5.5 மில்லியன்
ஆப்கானிஸ்தான் : 2.5 மில்லியன்
தெற்கு சூடான் : 1.4 மில்லியன்
அகதிகளுக்கு அதிகளவு அடைக்கலம் கொடுக்கும் நாடுகள்:
துருக்கி : 2.9 மில்லியன்
பாகிஸ்தான் : 1.4 மில்லியன்
லெபனான் : 1 மில்லியன்
ஈரான் : 979 400
உகண்டா : 940 800
எதியோப்பியா : 791 600
நன்றி தகவல் : BBC

0 Responses to அகதிகள் இடப்பெயர்வு தொடர்பில் ஐ.நா வெளியிட்டிருக்கும் அதிர்ச்சியூட்டும் புள்ளி விபரம்