Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“நாட்டை காவிமயமாக்க மத்திய பாஜக அரசு காய்களை நகர்த்தி வருகின்றது. மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் திமுக தலையாட்டாது. இன்னொரு சுதந்திர போராட்டத்தை ஏற்படுத்தி விடாதீர்கள்.” என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுகவின் தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் 94வது பிறந்தநாள் மற்றும் சட்டப்பேரவையில் அவரது 60வது ஆண்டு விழா ஆகியன ஒன்றாக நேற்று சனிக்கிழமை சென்னையில் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் பேசும் போதே மு.க.ஸ்டாலின் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “உலக வரலாற்றில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் தோல்வியே பார்க்காத தலைவர் கருணாநிதி. தமிழகத்தில் 19 ஆண்டுகாலம் முதலமைச்சராகவும், திமுகவை 48 ஆண்டுகாலம் வழிநடத்தி வரும் சாதனைக்கு உரியவர் கருணாநிதி அவர்கள்.

மருத்துவர் அறிவுரை பேரிலேயே கருணாநிதியை விழாவுக்கு அழைத்துவர இயலவில்லை. தமிழகத்தின் முதல்வராக இருந்து பல்வேறு சமூகநலத் திட்டங்களை செயல்படுத்தியவர் கருணாநிதி. நாட்டில் எண்ணற்ற பிரதமர்களை உருவாக்கியவர், உருவாக காரணமாக விளங்கியவர் கருணாநிதி. தேசிய அரசியலின் கலங்கரை விளக்காக விளங்குபவர் கருணாநிதி.

கருப்பு பணத்தை மீட்போம் என்ற மோடி அரசின் அறிவிப்பு என்ன ஆனது? ஒவ்வொரு இந்தியர்களின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்ற செய்திக்கு என்ன ஆனது? தற்போது இந்திய ஜனநாயகத்தை நிலைநாட்டுவதே நம் முன் இருக்கும் மிகப்பெரிய சவால்.

கொள்கையில் இருந்து என்றுமே பின்வாங்காதவர் கருணாநிதி. மதசார்பற்ற ஆட்சியை உருவாக்க ஒன்று சேர்வோம். நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை; இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம்.

நாட்டை காவிமயமாக்க மத்திய பாஜக அரசு காய்களை நகர்த்தி வருகின்றது. மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் திமுக தலையாட்டாது. இன்னொரு சுதந்திர போராட்டத்தை ஏற்படுத்தி விடாதீர்கள். சுதந்திர போரட்டத்திற்கு தயாராகி விட்டோம் என காட்டத்தான் இந்த கூட்டம்.” என்றுள்ளார்.

0 Responses to இன்னொரு சுதந்திர போராட்டத்தை ஏற்படுத்தி விடாதீர்கள்: மு.க.ஸ்டாலின்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.