முல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி நடத்தப்படும் போராட்டங்கள் தொடர்பில் இதுவரை ஜனாதிபதி செயலகத்துக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமது காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாபுலவு மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில், அதனொரு கட்டம் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி செயலகத்திடம் மகஜரொன்றையும் கையளித்தனர்.
இதன்போதே, கேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்துக்கு எழுத்து மூலமான கோரிக்கைகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சமந்தி ரணசிங்க, போராட்டக்காரர்களிடம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, காணி உறுதிகளின் பிரதிகள் அடங்கிய கோவையை மின்னஞ்சலில் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவைக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடி இது குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to கேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை; ஜனாதிபதி செயலகம்