Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை பௌத்த சிங்கள நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாத அமைச்சர் மனோ கணேசனால், நாட்டில் நல்லிணக்கத்தை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது என்று பொதுபலசேனாவின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே தெரிவித்துள்ளார். ராஜகிரிய ஸ்ரீ சத்தர்மாராஜித விகாரையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தாங்கள் மறைந்த பிரதமர் பண்டாரநாயக்கவின் கொள்கைகளின் படியே செயற்படுவதாக கூறியுள்ளனர். அதன்பிரகாரம் நடந்து கொண்டும் உள்ளனர்.

பண்டாரநாயக்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்தில் இந்த நாட்டை பௌத்த சிங்கள நாடு என்று ஏற்றுக்கொள்கிறீர்களாக என்று அரசாங்கத்தைக் கேட்டார். ஆனால், அந்தக் கேள்வியை அவரின் மகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மறுத்துவிட்டார். அப்படியான நிலையில், மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்ஷவும் பண்டாரநாயக்கவின் கொள்கைகளோடு செயற்படுவதை பாராட்டுகின்றோம்.

எனினும், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு இலங்கை பௌத்த சிங்கள நாடு என்பது ஒவ்வாமையாக உள்ளது. அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இடைந்து நல்லிணக்கம் பேசிக் கொண்டிருக்கின்றார். அதுபோலவே, அமைச்சர் மனோ கணேசனும் இந்த நாடு பௌத்த நாடு என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார். இவ்வாறான எண்ணப்பாடுகளோடு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.” என்றுள்ளார்.

0 Responses to இலங்கை பௌத்த சிங்கள நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாத மனோ கணேசனால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது: பொதுபலசேனா

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...