Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“நடிகர் ரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க பா.ஜ.க முயற்சி செய்கிறது என்பது வெறும் வதந்தியே” என்று தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

டெல்லி சென்ற அவர் செய்தியாளர்களிடம் நேற்று வெள்ளிக்கிழமை கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு உள்ள ராம்நாத் கோவிந்த் வேட்பு மனுதாக்கல் செய்வதற்காக எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்று நாங்கள் கலந்துகொண்டோம். பிரதமர் மோடியை தனியாக சந்திக்கிற வாய்ப்பு ஏற்படவில்லை.

ஊடகங்களில் சில தினங்களாக வருவது போல கட்சி இணைப்பு தொடர்பான எந்த நோக்கத்துடனும் நான் டெல்லிக்கு வரவில்லை. தற்போதைக்கு இணைப்பு தொடர்பான எந்த முயற்சியும் இல்லை.

இரட்டை இலை சின்னத்தை வேட்பாளர்களுக்கு தரும் உரிமை கட்சியின் பொது செயலாளருக்கு மட்டுமே உள்ளது. அ.தி.மு.க.வின் சட்ட விதிப்படி தேர்ந்தெடுத்தால் மட்டுமே பொதுச்செயலாளராக வரமுடியும். நியமன முறையில் தேர்ந்தெடுக்கும் வழிமுறை இல்லை.

பொதுச்செயலாளரின் பதவி காலியாக இருக்கும் நிலையில் அடுத்துள்ள அவைத்தலைவர், பொருளாளர், தலைமை நிலைய செயலாளர் ஆகியோர் கட்சி பணிகளை ஆற்றுவார்கள் என்பதுதான் கட்சியின் சட்டம். தற்போது பொதுச்செயலாளர் இடம் காலியாக இருப்பதால் இரட்டை இலை சின்னத்தை பெறும் உரிமை யாருக்கும் இல்லை.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு எந்த பிரச்சினைக்கும் உடனுக்குடன் தீர்வு காணும் அரசாக இல்லை என்பது மக்கள் கருத்து. என்னுடைய கருத்தும் அதுவே. எங்களால் இந்த ஆட்சி கவிழாது. ஆனால் மக்கள் நலன் கருதும் வகையில் திட்டங்களை செயல்படுத்தாவிட்டால் அரசு நிலைத்து இருக்க முடியாது. மெத்தன போக்குடன் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

நடிகர் ரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க பா.ஜ.க முயற்சி செய்கிறது என்பது எல்லாம் வெறும் வதந்தி. அரசியலில் சேருவது பற்றி ரஜினிகாந்த் கருத்துக்கணிப்பு நடத்த சொல்லியிருக்கிறாரா? என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அரசியலுக்கு வருவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. அவர் முதலில் அது பற்றி அறிவிக்கட்டும். அதன் பிறகு பார்த்து கொள்ளலாம்.” என்றுள்ளார்.

0 Responses to ரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சிக்கவில்லை: ஓ.பன்னீர்செல்வம்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...