நாட்டில் இனவாதத்தைத் தோற்றுவித்து ஆட்சியதிகாரத்தினை அடைய முயற்சிக்கும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அரசாங்கத்தை விமர்ச்சிக்கும் ஊடகவியலாளர்களை வெள்ளை வானில் கடத்திச் சென்று, அவர்களை கொலை செய்த காலத்தை முடிவுக்கு கொண்டுவந்து, நாட்டில் ஊடக சுதந்திரத்தை நிலைநாட்டியுள்ளோம். ஆனால், அதனை ஏற்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதான் இன்று அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகின்றார். அதற்காக நாம் மீண்டும் முன்னைய கலாசாரத்தை நோக்கிச் செல்ல மாட்டோம்.
ஆனால், இந்த செயற்பாட்டை நாம் முன்னோக்கிக் கொண்டு செல்லும் போது, தேர்தலில் தோற்ற பழைய அவதாரங்கள் பழைய பிரச்சினைகளை மீண்டும் தோற்றுவிக்க முயல்கின்றன. இனவாதத்தை தோற்றுவிக்க முயற்சிக்கின்றன. அவ்வாறான பிரிவினைவாதிகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அவ்வாறு பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றவர்கள், தொப்பியை அணிந்து வந்தால் என்ன, காவியுடை தரித்து வந்தால் என்ன, வேறு எந்த ஆடை அணிந்து வந்தால் என்ன? அவர்களுக்கு எதிராக சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பதோடு, புதிய யுகத்தை ஏற்படுத்துவோம்.” என்றுள்ளார்.

0 Responses to இனவாதத்தை தோற்றுவிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: மங்கள சமரவீர