தொடர்ந்தும் காலம் தாழ்த்தாமல் காணாமற்போனோர் தொடர்பிலான தனிப்பணியகத்தை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறுவ வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
இதற்கு மேலாகவும் பாதிக்கப்பட்ட மக்களால் காத்திருக்க முடியாது எனத் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பணிப்பாளர் பிராஜ் பட்னாயக், அனைத்து சமூகங்களையும் சார்ந்த பல்லாயிரக் கணக்கானவர்கள் இந்தப் பணியகம் நிறுவப்படும் வரையில் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியும், பிரதமரும் சமீபத்தில் காணாமற்போனோரின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தமை வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த ஆறுதல் வார்த்தைகள் அவர்களுக்கான தீர்வை நோக்கி முன்னெடுக்கப்பட வேண்டும். மேலும், நீதித்துறையால் மாத்திரமே இலங்கை மக்களின் காயங்களை குணப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to காணாமற்போனோர் தொடர்பிலான பணியகத்தை இலங்கை உடனடியாக நிறுவ வேண்டும்: சர்வதேச மன்னிப்புச் சபை