நாட்டில் ஏற்படுகின்ற மத ரீதியிலான முரண்பாடுகளைத் தடுப்பதற்காக சட்டத்தை சரியாகவும் வினைத்திறனோடும் பயன்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்தோடு, முரண்பாடுகளை ஏற்படுத்தும் தரப்பினருக்கு விளக்கமளிக்கும் பொது வேலைத் திட்டம் ஒன்றின் அவசியம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ‘மதங்களுக்கு இடையிலான ஆலோசனை சபையின்’ கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டிற்குள் சமத்துவமின்மை, இன மற்றும் மத மோதல்களுக்கு இடமளிக்க முடியாது. நாட்டினுள் ஏற்படுகின்ற மத முரண்பாடுகள் தொடர்பில் மாவட்ட மட்டத்தில் அவதானம் செலுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசியல் பிரதிநிதிகள் மற்றும் மதத் தலைவர்களை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவை மிகவும் செயல்திறனுடன் செயல்படுத்துவதன் முக்கியத்துவம் உள்ளது. மதங்களுக்கு இடையிலான ஆலோசனை சபை மாதம் ஒரு முறையாவது கூட வேண்டும். இந்தக் கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்களை அடிப்படையாக வைத்து எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த விஷேட பரிந்துரைகளை அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் முன்வைப்பேன்.” என்றுள்ளார்.

0 Responses to மத முரண்பாடுகளைத் தடுக்க சட்டத்தை சரியாக செயற்படுத்த வேண்டும்: மைத்திரி