“எமக்கிடையில் இனி பிளவோ நெருக்கடி நிலையோ ஏற்படாது“ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் தமிழரசுக் கட்சியின் செயலாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழரசுக் கட்சியின் யாழ். அலுவலகத்தில் மாவை சேனாதிராஜாவைச் இன்று சனிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார். இதன்பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இன்றைய சந்திப்பின் போது வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் நியமனம் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது.
0 Responses to ‘எமக்கிடையில் இனி பிளவில்லை’; விக்னேஸ்வரனுடனான சந்திப்பின் பின் மாவை சேனாதிராஜா!